பகுதிநேர ரேஷன் கடை


பகுதிநேர ரேஷன் கடை
x

நீடாமங்கலம் அருகே பகுதிநேர ரேஷன் கடையை டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் ஊராட்சி கீழப்பட்டு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ ஏற்று பகுதி நேர ரேஷன் கடை அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ கலந்து கொண்டு பகுதிநேர ரேஷன் கடையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட கூட்டுறவு பதிவாளர் ராமசுப்பு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அன்பழகன், ஒன்றிய பொறியாளர் வெங்கடேஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், வக்கீல் கவியரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணி சுந்தர், ஒன்றிய குழு உறுப்பினர் அனிதா மாதவன், ஊராட்சி தலைவர் பாஸ்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story