பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலியவேல், பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 12 ஆயிரத்து 200 உடற்கல்வி, ஓவியம், கணினி உட்பட 8 துறைகளை கொண்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் பெற்று பணியாற்றி வருகின்றனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story