புஞ்சைபுளியம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி-பா.ஜ.க.வினர் 62 பேர் கைது


புஞ்சைபுளியம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட   இந்து முன்னணி-பா.ஜ.க.வினர் 62 பேர் கைது
x

62 பேர் கைது

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் 62 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

திரண்டார்கள்

இந்துக்களை பற்றி தவறாக பேசியதாக கூறி ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து புஞ்சைபுளியம்பட்டியில் கடையடைப்பு போராட்டத்துக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தார்கள். இந்தநிலையில் போராட்டத்துக்காக கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறி இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களை அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்திருந்தார்கள்.

இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் நேற்று மாலை மாவட்ட பா.ஜ.க. தலைவர்் கலைவாணி விஜயகுமார், இந்து முன்னணி பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர், கைது செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த திருமண மண்டம் முன்பு திரண்டார்கள்.

62 பேர் கைது

இதையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி ஹரிஹரன், இந்து முன்னனி நிர்வாகிகள் கார்த்தி, தனுஷ் ஆகிய 3 பேரை போலீசார் விடுதலை செய்தனர். எஞ்சிய 5 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று சத்்தி-கோவை நெடுஞ்சாலையில் இந்து முன்னணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதித்தது.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தார்கள்.. மொத்தம் 62 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story