பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்ததை கொண்டாடும் விதமாக சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜனதா சார்பில் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் சரவணன் தலைமையில் கட்சியினர் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சிறுபான்மை அணி தேசிய தலைவர் ஜமால் சித்திக் மற்றும் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் பூபதி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில், நகர தலைவர் ஜோசப் ஜெபராஜ், மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் ஜெயசுந்தர்ராஜ், ஒன்றிய துணைத் தலைவர் பொன்ராஜகோபால், ஒன்றிய பொதுச்செயலாளர் ஜெயராஜேஸ்குமார், ஒன்றிய மகளிரணி தலைவி முத்துலட்சுமி, வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகானந்தம், வர்த்தக பிரிவு தலைவர் மகேஷ், இளைஞரணி தலைவர் ராஜ்குமார், அரசு தொடர்பு பிரிவு தலைவர் சரவணன், உள்ளாட்சி பிரிவு தலைவர் மணிகண்டன், கிளைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், ரவிக்குமார், சுப்பையா, இளைஞரணி சண்முகநாதன் ஆதித்தன், முன்னாள் கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை, ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story