இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா
இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றது.
மானாமதுரை
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 144-வது ஆண்டு பாஸ்கு விழா ஆலயத்தின் எதிரே உள்ள அரங்கத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் திரை அரங்கு அமைக்கப்பட்டு நடைபெற்றது. விழாவில் சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு அருளாசி வழங்குதல், கண் தெரியாதவர்களுக்கு பார்வை கிடைக்க செய்தல், தொழு நோயாளிகளை குணமடைய செய்தல், ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிதல், மீண்டும் அவர் உயிர் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை நடித்து காட்டினர். இதில் மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை இமானுவேல்தாசன் மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.