ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
பயணிகள் நிழற்குடையை கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு தம்பிபட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5.70 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெய்சிம்மன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த விழாவில், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், தம்பிபட்டி வைரமணி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், முன்னாள் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் ராஜேந்திரன், மகிபாலன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சோமசுந்தரம், ம.தி.மு.க. நகர செயலாளர் ராஜ்மோகன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நகர பொருளாளர் புதுப்பட்டி செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.