ரூ.2,000 நோட்டுகளை பஸ்களில் பயணிகள் மாற்றலாம் - போக்குவரத்துறை


ரூ.2,000 நோட்டுகளை பஸ்களில் பயணிகள் மாற்றலாம் - போக்குவரத்துறை
x

அரசு பஸ்களில் ரூ 2,000 நோட்டுகளை பெறுவதற்கு எந்தத்தடையும் இல்லை என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருந்தநிலையில், அரசு பஸ்களில் பயணிகள் தரும் ரூ 2,000 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story