பஸ்சில் குடையை பிடித்து சென்ற பயணிகள்


பஸ்சில் குடையை பிடித்து சென்ற பயணிகள்
x

பஸ்சில் குடையை பிடித்து பயணிகள் சென்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற அரசு பஸ்சில் சென்ற பயணிகள் சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சுக்குள் குடையை பிடித்தபடி சென்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பஸ் பழுதடைந்ததால் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் சிலர் குடையை பிடித்தபடி சென்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த பஸ்சை அகற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்று கூறினர்.


Related Tags :
Next Story