பழுதடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை


பழுதடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை
x

பழுதடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

திருப்பூர்

மூலனூர், செப்.7-

மூலனூர்-அக்கரைபாளையம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை மூலனூர் காளிபாளையம் பிரிவு அருகே உள்ளது. இந்த சாலை கடந்த ஓராண்டுக்கு மேலாக பழுதடைந்து சாலையின் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் அந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து மற்றும் வாகன பழுது ஏற்படுவதால் அப்பகுதியில் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டுமாய் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-------



Next Story