பயணிகள் அவதி


பயணிகள் அவதி
x

நாகை புதிய பஸ் நிலையத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் பயணிகள் அவதியடைந்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகியவை அமைந்த மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதியிலிருந்து நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

எனவே புதிய பஸ் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

நேற்று காலையிலிருந்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வழிந்தோடியது. இந்த கழிவுநீர் அந்த பகுதியில் குளம் போல் தேங்கி நின்றது. இந்த கழிவுநீர் துர்நாற்றம் வீசியதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள் அவதியடைந்தனர்.


Next Story