வெளியூர்களுக்கு செல்ல பஸ் இல்லாமல் பயணிகள் அவதி


வெளியூர்களுக்கு செல்ல பஸ் இல்லாமல் பயணிகள் அவதி
x

நெல்லை டவுனில் வெளியூர்களுக்கு செல்ல பஸ் இல்லாமல் பயணிகள் அவதிபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நெல்லையில் இருந்து பாபநாசம், முக்கூடல், தென்காசி, கடையம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கக்கூடிய பஸ்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மோதி விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுக்க முடியாமல் கோர்ட்டு உத்தரவுப்படி பல பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருமானம் அதிகம் இல்லாததால் பல வழித்தடங்களுக்கு தற்போது பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவில் நெல்லையில் இருந்து பாபநாசம், தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் இரவு 9 மணியிலிருந்து அதிக பயணிகள் கூட்டத்துடன் வந்தது. இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு தென்காசி செல்லக்கூடிய ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் செல்ல முயன்றார். பயணிகள் ஓடி சென்று பஸ்சை தட்டினார்கள். இதைத்தொடர்ந்து அந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதில் பயணிகள் ஏறிவாசலில் ெதாங்கியபடி பயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து வந்த புளியங்குடி பஸ்சிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதுபோல் முக்கூடல் வழியாக பாபநாசம் செல்லும் பஸ் தாமதமாக வந்தது. அதிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story