காலதாமதமாக புறப்பட்ட பஸ்சால் பயணிகள் அவதி
காலதாமதமாக புறப்பட்ட பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் இருந்து செட்டேரி டேம் பகுதிக்கு அரசு டவுன் சென்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு அந்தப் பஸ் வந்தது. அந்தப் பஸ்சில் மகளிருக்கு கட்டணம் கிடையாது. அந்தப் பஸ்சில் ெபண்கள் பலர் ஏறினர். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6.30 மணிக்கு எடுக்க வேண்டிய பஸ்சை இரவு 8 மணி வரையும் எடுக்கவில்லை. இதனால் பஸ்சில் ஏறி அவதிப்பட்ட பெண்கள் கண்டக்டரிடம் கேட்டபோது உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என அலட்சியமாகக் கூறினார். பெண்களுக்கு இலவசம் என்பதாலும், பெண்கள் அதிகளவில் இருந்ததாலும் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை எடுக்க முன்வரவில்லை. சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டரக்டர் மீது பணிமனை மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story