பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதை கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில் சுமார் 3,000 பேர் கலந்து கொள்ள வேண்டும், மாவட்டம் முழுவதும் திண்ணைப்பிரசாரம் மற்றும் பா.ம.க. சாதனைகளை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும், 16 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம்- நகரி ெரயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும். பணி தொடங்கப்படாத பட்சத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.