பாதை வசதிக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்


பாதை வசதிக்கோரி  வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
x

தேவதானப்பட்டியில் பாதை வசதிக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

தேனி

தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் அடிப்படை வசதிகோரி பொதுமக்கள் பலமுறை ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பாதை வசதிக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, பெரியகுளம் தாசில்தார் ராணி, தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்ைக எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கருப்பு கொடியை அகற்றினர்.


Next Story