பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சாயல்குடி அருகே பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர், கன்னி விநாயகர், ஸ்ரீீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீஉஜ்ஜயினி மகாளி அம்மன், பத்திரகாளியம்மன், மதுரை வீர சுவாமி கோவில்களின் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா மண்டப திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிங்கப்பூர் தொழில் அதிபர் என்ஜினீயர் ஆனந்த லிங்கம் தலைமை தாங்கினார். கன்னிராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுந்தரமகாலிங்கம், திருப்பூர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ஈஸ்வரன், வக்கீல் அஜித் டோகோ, சென்னை பொறியாளர் நாகலிங்கம், கன்னிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, நான்காம் காலயாக சாலை பூஜை நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று கடம் புறப்பாடு நடைபெற்று கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பொதுஅன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கன்னிராஜபுரம் சத்திரிய நாடார் நடுநிலைப்பள்ளி கல்வி குழு தலைவர் பிரம்மநாதன், செயலாளர் தமிழ்ச்செழியன், ஆசிரியர் ஓய்வு பாண்டியன், மதுரை அமுதம் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜெய வீரபாண்டியன், சென்னை வாழ் கன்னிராஜபுரம் சுற்றுவட்டார நாடார் சங்க தலைவர் முருகேஷ் பாண்டியன், செயலாளர் செல்வலிங்கம், பொருளாளர் மணிராஜ், லிங்கம் டிரேடர்ஸ் சுரேஷ் முத்துக்கனி, கன்னிராஜபுரம் கிராம முன்னாள் தலைவர் பலவேசம் என்ற ரமேஷ், தொழிலதிபர்கள் செங்குட்டுவன், அசோகன், நிர்வாகத்தார்கள் சந்திரசேகர், வேலுச்சாமி, ராமர், ஆறுமுகம், கணேசன், முத்துச்செழியன், சின்ன கண்ணன், கணக்கர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை கன்னிராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.