மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குபோட்டு தற்கொலை..!
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த நோயாளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்ன பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 52). இவருக்கு கையில் காயம் ஏற்றபட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவின் 3-வது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை, மனைவி கடைக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு சென்ற மணிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிகிச்சைக்கு வந்த நோயாளி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story