செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி
செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி பயிற்சி டாக்டருக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பத்திரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயாளிகள் பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் அனிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் தரப்பில் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடுமையான பாதிக்கப்பட்டனர்.