ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் இருப்பதால் நோயாளிகள் அவதி
ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் பணியில் இருப்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
ஆனைமலை
ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் பணியில் இருப்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகாவில் டாப்சிலிப், காளியாபுரம் உள்பட 7 சுகாதார நிலை யங்களும், 32 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இதில், ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
இங்கு மகப்பேறு, சித்தா உள்ளிட்ட மருத்துவ பிரிவுகள் உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் காலை 10 மணி வரை பூட்டிக் கிடக்கிறது. அது போல் மாலை 5 மணிக்கு பிறகும் பூட்டப்படு வதாக கூறப்படுகிறது.
நோய் பாதிப்பு
இதனால் அந்த பகுதி மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப் புகளுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அதிலும் குறிப் பாக முதியோர், கர்ப்பிணிகள் சிகிச்சை பெற மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர்.
அதோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு மது அருந்துதல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைெபறுகின்றன.
காத்து கிடக்கும் நிலை
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக ஆனைமலை பகுதி மக்கள் சிகிச்சை பெறுவதற்கு வருகின்றனர். ஆனால் காலை 10 மணிக்கு தான் சுகாதார நிலையம் திறக்கப்படுகிறது.
அங்கு ஒரே ஒரு டாக்டர் மற்றும் ஒரு நர்சு மட்டுமே பணியில் இருப்பதால் சிகிச்சை பெற வருபவர்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டி உள்ளது.
தற்போது கொரோனா பரவல் மற்றும் மழை காலத்தில் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கர்ப்பிணி, பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு ஏற்படும் அவசர பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் வலியை தாங்கிய படி செல்லும் அவல நிலை உள்ளது.
கூடுதல் டாக்டர், நர்சு
மேலும் சிகிச்சை பெறுவதற்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே ஆனைம லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் டாக்டர் மற்றும் நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அதோடு ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுநேரமும் திறந்து வைக்க சம்மந்தப்பட்ட அதி காரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.