போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் காவல் ரோந்து வாகனங்கள் : முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
காவல் ரோந்து வாகனங்களை கொடியசைத்து முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ,
2021 - 2022 ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பட்டு அறையின் சேவையை பலப்படுத்ததும் விதமாக ,பழுதடைந்த ,பழைய ரோந்து வாகனங்கள் மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மேலும் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் காவல் ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது ,
அதன்படி சென்னையில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், நவீன கட்டுப்பட்டு அறையின் சேவையை பலப்படுத்ததும் விதமாக ரூ 14.71 கோடியில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை கொடியசைத்து முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Related Tags :
Next Story