குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் -டி.ஐ.ஜி. உத்தரவு


குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் -டி.ஐ.ஜி. உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2023 12:09 AM IST (Updated: 9 July 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என டி.ஐ.ஜி.உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என டி.ஐ.ஜி.உத்தரவிட்டுள்ளார்.

பாணாவரம், அவளூர் போலீஸ் நிலையங்களில் நேற்று மாலை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவேரிப்பாக்கம், பாணாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவேண்டும். பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு செய்யவேண்டும். மணல் திருட்டுக்கு துணைபோனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ்அசோக், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜா, அருள்மொழி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story