புரவி எடுப்பு திருவிழா
எஸ்.புதூர் அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகேபடமிஞ்சி கிராமத்தில் உள்ள சின்னம்மாள், பெரியகருப்பர், ஏழு கம்பை சாமிகள் கோவில் விழாவையொட்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் கிராமம் சார்பில் செய்யப்பட்ட புரவிகள் முன்னே வந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டுதல் புரவிகளை சுமந்து வந்தனர். இதில் 7 குதிரை, 7 கம்பை சாமிகள், காளைகள், மதலைகள், நாகம், வேட்டையர்கள், கன்னிமார்கள் என மண்ணால் செய்யப்பட்ட புரவிகளை தோளில் சுமந்து உலகம்பட்டி கிராமத்தில் இருந்து புறப்பட்டு படமிஞ்சி உடையான் கண்மாய் பெரியகருப்பர் கோவிலை வந்தடைந்தது.
இதைதொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story