கரமால் கொண்ட அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா


கரமால் கொண்ட அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
x

கரமால் கொண்ட அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கை பட்டி, பிராண்டிப்பட்டி, சூரம்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் கண்ணமங்கலம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள கரமால் கொண்ட அய்யனார் மற்றும் முப்புலி கருப்பர், சின்ன கருப்பு, பெரிய கருப்பு, முத்து கருப்பு ஆகிய கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த கிராமத்தார்கள் முடிவு செய்து சிங்கம்புணரி குலால வம்சாவளியினரிடம் பிடி மண் கொடுக்கப்பட்டது. சிங்கம்புணரி வேளார் தெரு புரவி பொட்டலில் புரவி செய்யும் பணி தொடங்கியது. அரண்மனை புரவி ஒன்று மற்றும் கிராம புரவி இரண்டு, நேர்த்திக்கடன் புரவி ஒன்று என நான்கு புரவிகள் தயார் செய்யப்பட்டன.

பின்னர் கோட்டைவேங்கைபட்டி, பிராண்டிப்பட்டி, சூரம்பட்டி கிராமத்தார்கள் ஒன்றிணைந்து சாமி அழைத்து வந்து புரவிக்கு மகா தீபாராதனை எடுக்கப்பட்டது. பக்தர்கள் புரவிகளை சுமந்து சிங்கம்புணரி வேளார் தெரு, மேலத்தெரு, சந்தி வீரன் கூடம், நாட்டாமங்கலம் சாலை வழியாக சென்று கோட்டைவேங்கைபட்டி கிராமத்தின் மைய பகுதியில் புரவிகள் இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

புரவிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று அவை கண்ணமங்கலம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள கரமால் கொண்ட அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழா ஏற்பாடுகளை கோட்டைவேங்கைப்பட்டி, பிராண்டிப்பட்டி, சூரம்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.



Next Story