புரவி எடுப்பு விழா


புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 28 Sep 2022 7:00 PM GMT (Updated: 28 Sep 2022 7:00 PM GMT)

புரவி எடுப்பு விழா நடந்தது.

திண்டுக்கல்


நத்தம் அருகே மூங்கில்பட்டியில் வீரன் பட்டாணிசாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புரவி எடுப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி ஊர் மந்தையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரவிகளான மண் குதிரைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய குதிரை, மாடு, ஆடு, நாய் போன்றவற்றின் புரவிகளை மேளதாளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக பெருமாள்மலை அடிவாரத்துக்கு எடுத்துச்சென்றனர். இதில் நத்தம், மூங்கில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மூங்கில்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.



Next Story