புரவி எடுப்பு விழா


புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:45 PM GMT)

கே.வயிரவன்பட்டியில் அமைந்துள்ள மகிழம்பூ அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்

கே.வயிரவன்பட்டியில் அமைந்துள்ள மகிழம்பூ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாக பிடிமண் கொடுக்கப்பட்டு குலாளர்களால் புரவிகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் குதிரைகள் ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடல் புரவி பொட்டலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரவு முழுவதும் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மந்தை திடலிருந்து புரவிகள் ஊர்வலமாக புறப்பட்டு 2 பெரிய புரவிகளை தொடர்ந்து சிறிய புரவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட மதலைகள் நேர்த்திக்கடனாக மகிழம்பூ அய்யனார் கோவில் சென்றடைந்தது.


Next Story