அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:45 PM GMT)

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் உள்ள கலியுக மெய் அய்யனார் கோவிலில் வைகாசி மாதத்தில் தேனம்மாள்பட்டி கிராமத்தார்கள் சார்பில் புரவி எடுப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு புரவி செய்ய தேனாம்மாள்பட்டி கிராமத்தின் சார்பில் பிடிமண் வழங்கப்பட்டு புரவிகள் பிரான்மலை புரவி பொட்டலில் தயாரானது. இதனையொட்டி பிரான்மலை புரவி பொட்டலில் தயாராக இருந்த அரண்மனை புரவி மற்றும் நேர்த்திக்கடன் புரவிகளை பக்தர்கள் சுமந்து கொண்டு தேனாம்மாள்பட்டி மந்தை அம்மன் கோவிலுக்கு முன்பு வைத்து பூஜை செய்தனர்.

அதைத்தொடர்ந்து தேனாம்மாள்பட்டியில் இருந்து 2 அரண்மனைப் புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் புரவிகளை பக்தர்கள் சுமந்து கொண்டு பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோவிலை அடைந்தனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ணமலர் அலங்காரத்தில் அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேனாம்மாள்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.


Next Story