மனுகொடுத்த சிறிது நேரத்தில் முதியவருக்கு பட்டா


மனுகொடுத்த சிறிது நேரத்தில் முதியவருக்கு பட்டா
x

மானூர் ஜமாபந்தியில் மனுகொடுத்த சிறிது நேரத்தில் முதியவருக்கு பட்டா வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

அப்போது, வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் யோசேப்பு என்பவர் பட்டா கேட்டு மனுகொடுத்தார். மனு கொடுத்த 5 நிமிடங்களிலேயே அவருக்கான பட்டா உதவி கலெக்டர் வழங்கினார். அப்போது, நேர்முக உதவியாளர் மாரியப்பன், தாசில்தார் முத்துலெட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர் கஸ்தூரி உடன் இருந்தனர்.


Next Story