பட்டிமன்றம், பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்


பட்டிமன்றம், பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்
x

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பட்டிமன்றம், பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டை, சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் மஸ்தான், குமுதா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி தொடங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. பட்டிமன்றம், கவியரங்கம், பொதுக்கூட்டங்கள், ஆகியவை நடத்தியும், கருணாநிதியின் சிறப்புக்களை மாணவர் சமுதாயமும் அறியும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி நடத்தியும், கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளை நடத்தியும், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிராம கிளைகள் முழுவதும் கொண்டாடுவது.

மாவட்டம் முழுவதும், தி.மு.க. கொடி ஏற்றி. ரத்த தானம், கண்தானம், உணவு வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்பு வழங்குதல் உள்ளிட்டவைகளை நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் செயல்பட்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், கண்ணையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story