பால், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பால், சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பால், மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திருச்சி மாநகரில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி, சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் ஆவின் சேர்மனும், மாணவரணி மாவட்ட செயலாளருமான சி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் அய்யப்பன், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ்பாண்டியன், கவுன்சிலர் சி.அரவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா, கலீலுல்ரகுமான் உள்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பேசுகையில், "ஆவின் பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை மாதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு சொத்துவரி உயர்வும், மின் கட்டண உயர்வும்தான் காரணமாகும். மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது" என்றார்.