ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்


ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்
x

வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்என அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்என அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

செயற்குழு கூட்டம்

நாகையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாலசண்முகம் வரவேற்றார். பானுதாசன், விஜயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகமது அலி தீர்மானங்களை விளக்கி பேசினார்.

உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகளை அரசு விரைந்து வழங்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதுவது, வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊதியம் வழங்க வேண்டு்ம்

ஆனால் அரசு உத்தரவிட்ட பிறகும், நாகையில் உள்ள உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளவரசி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story