பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம்

அண்ணா பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் மாநகராட்சி முன்புள்ள அண்ணா சிலை மற்றும் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, சி.வி.எம்.பி.அ.சேகர், கே.ஆறுமுகம், வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில்

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, மாநில எம். ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதியுடன் ஏராளமான ம.தி.மு.க.வினர் மற்றும் பலர் மாலை அணிவித்து வணங்கினர்.

பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் அங்குள்ள அண்ணா படத்துக்கு அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன் மாலை அணிவித்து பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு நோட்டுபுத்தகம், பேனா, இனிப்புகளை வழங்கினார். இதில் தமிழக கைத்தறி துறை இணை இயக்குனர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பாக மாநகராட்சி முன்பு உள்ள அண்ணா சிலைக்கு அதன் நிறுவனர் கவிஞர் கூரம் துரை மாலை அணிவித்து வணங்கினர். அவருடன் கவிஞர்கள் விஷார் ஜெகநாதன், குப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் (ஓ.பன்னீர்செல்வம் அணி) முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார், சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு திரளானோருடன் சென்று அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு இருந்த அனைவருக்கும் அவர் இனிப்பு வழங்கினார்.

அவருடன் மாவட்ட பிரதிநிதி எஸ்.ரங்கநாதன், புல்லட் கே.பரிமளம், வக்கீல் ஆர்.வி.உதயன், வஜ்ஜிரவேல், வாலாஜாபாத் ஜெயகாந்தன், டில்லி, மதன், படப்பை கோபால், முனிரத்தினம், யோகானந்தம், காமாட்சி கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ் ஆறுமுகம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கொத்திமங்களம் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்மணி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வினோத், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா வேலு, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பார்த்தசாரதி, ஒன்றிய துணை செயலாளர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை ஆ.மனோகரன் கலந்து கொண்டு அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story