பரிதிமாற்கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பரிதிமாற்கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

பரிதிமாற்கலைஞரின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

பரிதிமாற்கலைஞரின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தமிழ் அறிஞர் பரிதிமாற்கலைஞரின் நினைவு இல்லத்தில் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசு சார்பில் பரிதிமாற்கலைஞரின் உருவ சிலைக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு நினைவு இல்லத்தை முழுவதுமாக பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கோ.தளபதி எம்.எல்.ஏ, வருவாய் கோட்டாட்சியர் சாலினி, மதுரை மாநகராட்சி கவுன்சிலர் இந்திராகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து பரிதிமாற்கலைஞரின் பேரன் வி.சு.கோவிந்தன், பேத்தி திருவாமை பிரபா கோவிந்தன் ஆகியோர் பரிதிமாற்கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள்.

இதனையடுத்து விளாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் முத்துலட்சுமி குரும்பன், ஊராட்சி செயலர் ராஜமாணிக்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ், மாநகராட்சி கவுன்சிலர் உசிலை சிவா, திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் இந்திரா ஜெயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க

மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் தவமணி மாயி, மாயாண்டி, வட்டச்செயலாளர் திருநகர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மாவட்ட பிரதிநிதி விளாச்சேரி ஆறுமுகம் , நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் மருது முத்து, ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மைய தலைவர் ஜி.அய்யல்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Related Tags :
Next Story