சர்க்கரையை ஆலையை முற்றுகையிடும் போராட்டம்: த.வா.க.வினருடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


சர்க்கரையை ஆலையை முற்றுகையிடும் போராட்டம்:  த.வா.க.வினருடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
x

சர்க்கரையை ஆலையை முற்றுகையிடும் போராட்டம் தாெடா்பாக த.வா.க.வினருடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

கடலூர்



கடலூர் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் தொழிற்சாலையின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக கூறி, அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் சுரேந்தர், ஒன்றிய செயலாளர் ராஜீ, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய தலைவர் நாராயணன், நகர தலைவர் செல்வம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் ஆலை தரப்பில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் முன்கூட்டியே வந்து கருத்துகளை தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத கட்சியினர், விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறி சென்று விட்டனர். இதன் மூலம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


Next Story