அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்


அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 2:13 AM IST (Updated: 15 July 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால்அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அம்மாப்பேட்டை ஒன்றியங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சு. கல்யாணசுந்தரம் எம்.பி. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நில நீர் வல்லுனர் லெட்சுமணன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைச்செல்வன், சுமதி.கண்ணதாசன் மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாய சங்க அமைப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட குடிநீர் திட்ட பணிகளை தொடங்குவற்கு முன்பு நிலத்தடி நீரை தக்க வைக்கும் பொருட்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ள பகுதியில் கதவணை அமைக்க அரசை கேட்டு கொள்வது, இது தொடர்பான அரசு மூலம் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடங்க விட மாட்டோம் என தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தொடர் நடவடிக்கை மேற்கொள்வதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story