கடலூர் அருகே காயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி சாவு


கடலூர் அருகே  காயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி சாவு
x

கடலூர் அருகே காயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி உயிாிழிந்தது.

கடலூர்



கடலூர் அருகே ஈச்சங்காடு வயல்வெளியில் காயங்களுடன் பெண் மயில் ஒன்று பறக்க முடியாமல் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சமூக ஆர்வலர் ராம்குமார், முகமது, வெங்கடேஷ் ஆகியோர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, அந்த மயிலை காயங்களுடன் மீட்டு கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அந்த மயிலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மயில் இறந்து விட்டது. மின்கம்பியில் அடிப்பட்டு விழுந்த மயிலை, நாய்கள் கடித்ததால், காயம் ஏற்பட்டு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த மயில் வனக்காப்பாளர் ஆதவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 More update

Next Story