ரெயிலில் அடிபட்டு மயில் பலி


ரெயிலில் அடிபட்டு மயில் பலி
x
தினத்தந்தி 22 May 2023 12:30 AM IST (Updated: 22 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மயில் ஒன்று பலியானது.

திண்டுக்கல்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று அந்தியோதயா ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் என்ஜின் பகுதியில் ஒரு மயில் இறந்து கிடப்பதை ரெயில்வே போலீசார் பார்த்தனர். உடனே என்ஜினில் சிக்கியிருந்த மயிலின் உடலை மீட்ட போலீசார் அதனை திண்டுக்கல் வனக்காவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். இரைக்காக தண்டவாள பகுதியை மயில் கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story