மின்சாரம் தாக்கிமயில் சாவு


மின்சாரம் தாக்கிமயில் சாவு
x

மயில்

ஈரோடு

ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு ரோடு பிருந்தாவன் மகால் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பறந்து வந்த மயில் ஒன்று அந்த டிரான்ஸ்பார்மரில் உட்கார்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மயில் சம்பவ இடத்திலேயே பலியானது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார், ஈரோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து போன மயிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தது ஆண் மயில் என்றும், பிரேத பரிசோதனை முடிந்ததும் வனப்பகுதியில் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story