மின்சாரம் தாக்கி மயில் சாவு


மின்சாரம் தாக்கி மயில் சாவு
x

திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலப் பகுதிகளுக்கு இறைக்காக அதிகளவில் மயில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கட்டுமாவடி அருகே உள்ள விவசாய நில பகுதியில் நேற்று ஒரு பெண் மயில் பறந்து சென்ற போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அந்த மயில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை மீட்டு நாகை வனக்காப்பாளர் உலகநாதன். வனசிப்பந்திகள் ஜெயகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் மயிலை எடுத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புதைத்தனர்.


Next Story