மின்சாரம் தாக்கி மயில் சாவு


மின்சாரம் தாக்கி மயில் சாவு
x

மின்சாரம் தாக்கி மயில் சாவு

திருவாரூர்

முத்துப்பேட்டையை அடுத்த பாண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதனை பார்த்த எடையூர் போலீசார் ரஞ்சித், தனபால் ஆகியோர் முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வன அலுவலர் ஜனனி உத்தரவின் பேரில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய வனக்காவலர் ராஜமாணிக்கம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இறந்த கிடந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story