கார் மோதி மயில் சாவு


கார் மோதி மயில் சாவு
x

கார் மோதியதில் மயில் பரிதாபமாக இறந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் எதிரே நேற்று ஆண் மயில் ஒன்று தாழ்வாக பறந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த கார் மயில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி அந்த காரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story