கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் படுகாயத்துடன் கிடந்த மயில்


கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் படுகாயத்துடன் கிடந்த மயில்
x
தினத்தந்தி 17 July 2023 12:30 AM IST (Updated: 17 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் படுகாயத்துடன் கிடந்த மயில்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அன்பு (வயது 20) இவரது நண்பன் கார்த்தி (22). இருவரும் நேற்று மதியம் மொபட்டில் கிணத்துக்கடவு வந்துவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பிய போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அடுத்து சர்வீஸ் சாலை இணையும் பகுதியில் ஒரு பெண்மயில் சிறகு மற்றும் உடலில் பலத்த காயமடைந்து சாலையில் துடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த இருவரும் உயிருக்கு போராடிய பெண் மயிலை மீட்டு கிணத்துக்கடவு போலீசார் அறிவுரையின்படி பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். இளைஞர்கள் இருவரின் செயலை போலீசார் மற்றும் வனத்துறையினர் பாராட்டினார்கள். பெண் மயிலுக்கு வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story