விவசாய தோட்டத்தில் மயங்கி கிடந்த மயில்


விவசாய தோட்டத்தில் மயங்கி கிடந்த மயில்
x

வேடசந்தூர் அருகே விவசாய தோட்டத்தில் மயில் ஒன்று மயங்கி கிடந்தது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது தோட்டத்தையொட்டி உள்ள பகுதியில், ஆண் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு அய்யலூர் வனத்துறையினர் விரைந்தனர்.

பின்னர் அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த மயிலை மீட்டு, சேனங்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மயிலை பராமரித்து உடல்நிலை சீரானவுடன் வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதேபோல் மயில் மயக்கம் அடைந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story