புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்
x

சிவகிரியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தென்காசி

சிவகிரி:

சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணா பாய் உத்தரவின் பேரில், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், விஷ்ணு, ராஜாராம், சிவகிரி நகரப்பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் குமார் மற்றும் அலுவலர்கள், சிவகிரி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள், சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.

குமாரபுரம், சிவராமலிங்கபுரம், மேலத்தெரு, சிவகிரி ரதவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும், பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 6 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.



Next Story