சேலம் மாவட்டத்தில் விதிமுறை மீறி இயக்கிய 22 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்


சேலம் மாவட்டத்தில் விதிமுறை மீறி இயக்கிய 22 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
x

சேலம் மாவட்டத்தில் விதிமுறை மீறி இயக்கிய 22 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூர் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது 22 ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம், அதிக பாரம், ஏர்ஹாரன் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீறி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.


Related Tags :
Next Story