அரூர் அருகேகாட்டுப்பன்றி கறி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்


அரூர் அருகேகாட்டுப்பன்றி கறி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 31 May 2023 10:30 AM IST (Updated: 31 May 2023 10:32 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் அருகே காட்டுப்பன்றி கறி வைத்திருந்த 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

காட்டுப்பன்றி கறி

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சட்டையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப்பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனவர் குப்புசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அதேபகுதியை சேர்ந்த திருப்பதி (வயது60), மன்னன் (55), ஜெயசங்கர் (40) ஆகிய 3 பேரும் காட்டுப்பன்றி கறி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விவசாய நிலத்தில் போட்ட கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியை வெட்டி கறி வைத்திருந்தது தெரியவந்தது.

3 பேருக்கு அபராதம்

இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story