பரமத்திவேலூரில்விதிமுறை மீறி இயக்கிய 3 வாகனங்களுக்கு அபராதம்


பரமத்திவேலூரில்விதிமுறை மீறி இயக்கிய 3 வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:35 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்

நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டதில் அந்த வாகனத்திற்கு ஆண்டு வரி செலுத்தப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வாகனத்திற்கு அபராத தொகையுடன் சேர்த்து ரூ.13 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனத்திற்கு ரூ.30 ஆயிரம் இணக்க கட்டணம் வசூலிக்கும் பொருட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமலும், அனுமதி சீட்டு இல்லாமலும் அந்த வழியாக வந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story