போக்குவரத்து விதிமுறைகளை மீறியவாகனங்களுக்கு அபராதம்


போக்குவரத்து விதிமுறைகளை மீறியவாகனங்களுக்கு அபராதம்
x
நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிபாளையத்தில் கடந்த மாதம் போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் 515 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 101 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. சாலை வரியாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரமும், இணக்க கட்டணமாக ரூ.2 லட்சத்து 47 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டது. மற்ற குற்றங்களுக்காக ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தணிக்கையில் அனுமதி இல்லாமல் சொந்த பயன்பாட்டு கார்கள், தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 2 லாரிகள், பிற மாநில தமிழ்நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தாத ஆம்னி பஸ் ஒன்றும் சிறை பிடிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு தொடர்பாக அதிக பாரம், தார் பாய் மூடாமல் மணல் ஏற்றிச் சென்ற 4 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மொபைல் போன் பேசி சாலையில் இயக்கிய இருசக்கர வாகன ஓட்டுனர்கள் 7 பேருக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்த 18 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story