புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாவட்டம் முழுவதும் 106 கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அரியலூர் தற்காலிக பஸ் நிலையம், வி.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதித்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு பாதுகாப்பு தரம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மோி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.