அதிக பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு அபராதம்
கடலூரில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்
கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று காலை கடலூர் ஜவான் பவன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அடுத்தடுத்து வந்த டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் 5 டிப்பர் லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஜல்லி மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த 5 டிப்பர் லாரிகளுக்கும், அதிகளவு பாரம் ஏற்றி வந்ததற்காக மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது அண்ணாபாலம் வழியாக ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றி வந்ததை பார்த்த போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்டோ டிரைவர்களை எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story