பிளாஸ்டிக், புகையிலை விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
காவனூர் பகுதியில் பிளாஸ்டிக், புகையிலை விற்ற 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த காவனூர் பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் திமிரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மணி, பழனி ஆகியோர் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்ரு செய்யப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் மற்றும் புகையிலை விற்பனை செய்த 5 கடைக்கார்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு விடுதியில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடையின் முன்பு புகை பிடிக்கக் கூடாது என விளம்பரப் பலகை வைக்கவும், பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story