புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், அரியலூர் மற்றும் திருமானூர் வட்டாரம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கோட்ட கலால் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பழனிசாமி மற்றும் ராமசாமி ஆகியோர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளிக்கு அருகில் இருந்த 42 கடைகளில் ஆய்வு செய்ததில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைகளுக்கு அபராத தொகை ரூ.34 ஆயிரம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை இதுபோன்று விற்பனை செய்தால் கடைக்கு "சீல்" வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story